“நாங்க சாகப் போறோம்…” உறவினர்களுக்கு வந்த கடைசி போன் கால்.. காதல்ஜோடி எடுத்த விபரீத முடிவு.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நாங்க சாகப் போறோம்…” உறவினர்களுக்கு வந்த கடைசி போன் கால்.. காதல்ஜோடி எடுத்த விபரீத முடிவு.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் கக்குமானு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் 22 வயது என்ற இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்புகள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இருவரும் தங்களது வீடுகளை விட்டு திடீரென வெளியேறினர். மறுநாள் புதன்கிழமை, அண்டை மாவட்டமான பாபட்லாவில் உள்ள கொனாங்கி குளக்கரைக்கு இருவரும் வந்து சேர்ந்துள்ளனர்.

அங்கு வைத்து, தாங்கள் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகத் தங்களது மொபைல் போன் மூலம் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, தாங்கள் கொண்டு வந்திருந்த எலி விஷத்தை அருந்திய காதலர்கள் இருவரும், கொனாங்கி குளத்திற்குள் குதித்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர். குளத்தில் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு இத்துயரச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in