LATEST NEWS
“பஸ்ஸையே ஆட்டைய போட்ட திருடர்கள்” நள்ளிரவில் அரசு டெப்போவில் நடந்த பகீர் சம்பவம்.. ஆனா அதுக்கு அப்புறம் நடந்த டுவிஸ்ட் வேற லெவல்..!!
மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஜாம்னர் அரசுப் பேருந்து பணிமனையிலிருந்து , புதிதாக விநியோகிக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒன்றை மர்ம நபர்கள் நள்ளிரவில் திருடிச் சென்றுள்ளனர். பேருந்து பணிமனையின் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தையும் மீறி, அங்கிருந்த கண்காணிப்பை ஏமாற்றி இப்பேருந்து மிக எளிதாக வெளியே ஓட்டிச் செல்லப்பட்டுள்ளது.
ஆனால், திருடப்பட்ட அந்தப் பேருந்து வெகுதூரம் செல்வதற்கு முன்பாகவே அதன் டயர் திடீரென பஞ்சராகியுள்ளது. இதனால் மேலே பயணிக்க முடியாத திருடர்கள், பேருந்தை ஒரு கிராமத்தின் அருகே அப்படியே கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பணிமனையின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது காவல்துறையினர் இத்திருட்டு வழக்கை தீவிரமாகப் புலனாய்வு செய்து, குற்றவாளிகளையும் அவர்களின் நோக்கத்தையும் தேடி வருகின்றனர்.
