TRENDING
இஸ்ரோவின் அடுத்த டார்கெட்… சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து சூரியனுக்கு பயணம்… தயாராகிறது ஆதித்யா எல் 1 விண்கலம்..!!

நிலவில் உள்ள தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 14ஆம் தேதி இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. இந்தியாவின் இந்த விண்கலத்தின் விக்ரம் கிரைண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கிய நிலையில் விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தற்போது தொடங்கியுள்ளது.
நிலவின் மண்ணில் மெதுவாக நகர்ந்து ஆய்வு செய்து வருகின்றது. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆதித்யா விண்கலத்தை விண்ணிற்கு செலுத்த உள்ளதாக இஸ்ரேல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் பாய உள்ளது. சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்த விண்கலம் டி எஸ் எல் வி சி 57 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.