CRIME
“அப்பாதான் அம்மாவை வெட்டினாரு…” 5 வயது சிறுவன் சொன்ன ஒரே வார்த்தை.. போலீஸாரே உறைந்துபோன அதிர்ச்சி சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் மகோபா அருகே உள்ள பிஜ்ராரி கிராமத்தைச் சேர்ந்த ஹனீப் மன்சூரி என்ற நபர், மது மற்றும் சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் வழக்கம் போல போதையில் வீட்டிற்கு வந்து தனது 8 மாத கர்ப்பிணி மனைவியான மனிஷா மன்சூரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஹனீப் வீட்டில் இருந்த கூர்மையான அரிவாளால் மனைவியின் தலை மற்றும் கழுத்தில் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மனிஷா, 5 வயது மகனின் கண்ணெதிரிலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்ததைத் தொடர்ந்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நினைத்த ஹனீப், போலீசாருக்குத் தானே போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளிடம், தனது மனைவிக்கு என்ன ஆனது என்றே தெரியாது என நாடகமாடி திசைதிருப்ப முயன்றுள்ளார். ஆனால், மனிஷாவின் உடலிலிருந்த காயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இக்கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த 5 வயது மகன் பைசான், “அப்பாதான் அம்மாவை அரிவாளால் வெட்டினார்” என்று போலீசாரிடம் துணிச்சலாக உண்மை வாக்குமூலம் அளித்தான்.
சிறுவனின் சாட்சியத்தைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஹனீப் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மது அரக்கனின் கொடூரத்தால் 8 மாத கர்ப்பிணிப் பெண் கொல்லப்பட்டதும், பெற்ற தாயின் கொலையை 5 வயது சிறுவன் நேரில் பார்த்த அதிர்ச்சிச் சம்பவமும் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
