“செல்போனுக்கு சார்ஜர் போடனும்” யாரும் இல்லா நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த உறவினர்… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… சேலத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“செல்போனுக்கு சார்ஜர் போடனும்” யாரும் இல்லா நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த உறவினர்… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… சேலத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே 15 வயது பிளஸ்-1 பள்ளிச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக, அவரது உறவினரான மோகன் (25) என்ற இளைஞரைச் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, செல்போனுக்கு சார்ஜர் போட வேண்டும் என்று கூறி மோகன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். உறவினர் என்பதால் சிறுமி சந்தேகப்படாத நிலையில், அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து வெளியில் கூறினால் சிறுமிக்கே அவமானம் ஏற்படும் என மோகன் மிரட்டியதால், பயந்துபோன அச்சிறுமி யாரிடமும் இதைக் கூறாமல் மறைத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தாய், சிறுமியைச் சேலம் அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

Advertisement

அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 9 மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறிய அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. பெற்றோர் விசாரித்ததில் நடந்த உண்மைகளைச் சிறுமி கூறவே, அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மோகனைக் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான மருத்துவ உதவிகளும், பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in