DISTRICT NEWS
“என் பையன் பண்ணதுல என்ன தப்பு..?” 13 மாதக் குழந்தையை விபத்தில் சிக்க வைத்த 15 வயது சிறுவனுக்கு வக்காலத்து வாங்கிய தாய்.. நெட்டிசங்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 15 வயது சிறுவன் ஒருவன் அதிவேகமாகக் காரை ஓட்டிச் சென்று, மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதிய விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் ஓட்டி வந்த கார் மோதியதில், மற்றொரு கார் பலத்த சேதமடைந்தது. மிகக் கொடூரமான இந்த விபத்தின்போது, பாதிக்கப்பட்ட காரின் உள்ளே 13 மாதக் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதப் பெரிய காயமும் ஏற்படவில்லை என்றாலும், சிறுவர்களின் பொறுப்பற்ற வாகன இயக்கம் பொதுமக்களின் உயிருக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
🚨 SHOCKING: A 15-year-old boy was allegedly driving a car in Noida when he rammed into another car, badly damaging it. A 13-month-old child was reportedly inside the other vehicle, but thankfully no one was injured. When confronted, the boy’s mother allegedly tried to justify… pic.twitter.com/9x5hh82XbQ— indiainlast24hr (@indiain24hr) August 21, 2026
இந்த விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியபோது, சிறுவனின் தாய் தனது மகனின் தவறுக்காகப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, ஒரு சிறுவன் கார் ஓட்டியதை அநியாயத்திற்கு நியாயப்படுத்த முயன்றது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்ற தாயே சட்ட விரோதமான இந்தச் செயலை ஆதரித்துப் பேசியது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது. உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவர்களிடம் வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் தங்களின் கண்டனக் குரல்களை வலுவாகப் பதிவு செய்து வருகின்றனர்
