“ஐயோ நெஞ்சே பதறுது..!” காற்றில் பல அடி உயரம் பறந்த பைக் ரைடர்.. அலாக்காகக் கவிழ்ந்த ஜீப்.. கேரளாவை அதிரவைத்த கொடூர விபத்தின் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ நெஞ்சே பதறுது..!” காற்றில் பல அடி உயரம் பறந்த பைக் ரைடர்.. அலாக்காகக் கவிழ்ந்த ஜீப்.. கேரளாவை அதிரவைத்த கொடூர விபத்தின் சிசிடிவி காட்சி..!!

Published

on

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள போவிகானம் பகுதியில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஜீப் மீது பயங்கர மோதிய விபத்தில், ஜீப் தலைகீழாகக் கவிழ்ந்ததோடு பைக்கில் வந்த வாலிபர் காற்றில் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட கொடூர விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அங்குள்ள ஒரு சந்திப்பில் ஜீப் ஒன்று திரும்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மிக அதிவேகமாக வந்த பைக் அதன் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த மோதலின் தாக்கம் எந்த அளவுக்குக் கொடூரமாக இருந்தது என்றால், மோதிய வேகத்தில் அந்தப் பெரிய ஜீப் அலாக்காகத் தலைகீழாகக் கவிழ்ந்தது; பைக்கை ஓட்டி வந்த நபர் படுகாயங்களுடன் காற்றில் பல அடி உயரத்திற்குப் பறந்து தூரப் போய் விழுந்துள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர், அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அந்தச் சந்திப்பில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த விபத்தின் கோரமான காட்சிகள் நெட்டிசன்களை உலுக்கி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in