National
“திக் திக் நிமிடங்கள்!… டிரெய்லர் லாரி சக்கரம் அடியில் பைக்… ஆனால் நடந்ததோ மிராக்கிள்.. நண்பனை விட்டு எஸ்கேப் ஆன வாலிபர்… நெஞ்சை உறைய வைத்த பகீர் வீடியோ”..!!
ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் உள்ள கிரிராஜ் தாம் கோவில் முன்பாக ஒரு பெரும் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது. அங்கு வேகமாக வந்த டிரெய்லர் லாரியின் சக்கரங்களுக்கு அடியில் சிக்காமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அசாத்தியமாக உயிர் தப்பினார். சில நொடிகள் தாமதித்திருந்தாலும் அவரது உயிர் பிரிந்திருக்கும் என்ற அளவில் அந்த விபத்துக் காட்சி பார்ப்போரைக் உரையவைப்பதாக இருந்தது.
किस्मत का करिश्मा, मौत छूकर निकल गई!
राजस्थान के दौसा में गिरिराज धरण मंदिर के सामने एक बड़ा हादसा होते-होते टल गया। एक मोटरसाइकिल सवार ट्रेलर की चपेट में आने से बाल-बाल बच गया। हादसा इतना भयावह था कि कुछ सेकंड की भी देरी उसकी जान ले सकती थी।
सबसे दिलचस्प बात यह रही कि बचने के… pic.twitter.com/I1srHaqVG1— नई सोच (@NayiSochHQ) July 20, 2026
இந்த சம்பவத்தின் மிகவும் விசித்திரமான பகுதி என்னவென்றால், விபத்திலிருந்து தப்பிய அந்த வாலிபர், பயத்தில் தன் நண்பனை அங்கேயே விட்டுவிட்டு ஒரு குறுகிய சந்துக்குள் ஓடி ஒளிந்தார். இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். “கொல்பவனை விட காப்பவனே பெரியவன்” என்பதற்கு ஏற்ப, அந்த இரு இளைஞர்களுக்கும் கடவுள் மறுபிறவி கொடுத்தது போல இந்த விபத்து அமைந்தது.
