LATEST NEWS
ஐயோ சார் என்னாச்சு..? வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்… பார்த்ததும் அதிர்ந்துபோன மாணவர்கள்… இதே நிலைமை தான் மாணவர்களுக்கும்… வைரல் வீடியோ..!!
பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் நடந்துகொண்டிருந்த வேளையில், வகுப்பறையின் மேற்கூரை பிளாஸ்டர் திடீரெனப் பெயர்ந்து விழுந்து ஆசிரியர் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக வகுப்பறையிலிருந்த மாணவர்கள் அனைவரும் எவ்வித காயமுமின்றி மயிரிழையில் உயிர் தப்பினர். இருப்பினும், இச்சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தை உருவாகியுள்ளது.
வழக்கம்போல் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவி ஆசிரியர் ஜாஹிதுல் இஸ்லாம் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோதுதான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. எதிர்பாராதவிதமாகப் பயங்கர சத்தத்துடன் மேற்கூரையின் பிளாஸ்டர் துண்டுகள் பெயர்ந்து நேரடியாக ஆசிரியரின் தலையிலேயே விழுந்தன. ஆசிரியர் கண்முன்னே காயமடைந்து விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறினர். தலையில் பலத்த காயமடைந்த ஆசிரியருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டுச் சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டன.
https://www.instagram.com/reel/Db7qQIokrks/?utm_source=ig_web_button_share_sheet
இச்சம்பவம் குறித்து விளக்கிய பள்ளி தலைமை ஆசிரியர், இப்பள்ளிக் கட்டிடம் 1960-ஆம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான அமைப்பாகும் என்றும், போதிய பலமின்மை காரணமாகவே கூரையின் பிளாஸ்டர் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவித்தார். பழைய கட்டிடங்களின் பராமரிப்புப் பணிகளில் நிலவும் தாமதமே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் என அங்கிருந்தவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
