புருஷனை விட்டுட்டு காதலனுடன் ஓட்டம்… வாடகை வீட்டிற்குள் வீசிய துர்நாற்றம்… டிராலி பேக்குக்குள் காத்திருந்த அதிர்ச்சி… 18 வயது காதலிக்கு நேர்ந்த கொடூர தண்டனை…!! – cinefeeds
Connect with us

CRIME

புருஷனை விட்டுட்டு காதலனுடன் ஓட்டம்… வாடகை வீட்டிற்குள் வீசிய துர்நாற்றம்… டிராலி பேக்குக்குள் காத்திருந்த அதிர்ச்சி… 18 வயது காதலிக்கு நேர்ந்த கொடூர தண்டனை…!!

Published

on

பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த 18 வயதான சோட்டி குமாரி என்பவருக்கும் மணீஷ் உபாத்யாய என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, சோட்டி குமாரிக்குத் தனது அண்டை வீட்டைச் சேர்ந்த ரிஷப் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது தீவிர காதலாக மாறியுள்ளது.

காதல் வயப்பட்ட சோட்டி குமாரி, கடந்த 2024-ஆம் ஆண்டு தன் கணவர் வீட்டின் நகைகளை எடுத்துக்கொண்டு காதலன் ரிஷப் குமாருடன் வீட்டை விட்டு வெளியேறினார். இருவரும் தாமன் பகுதியில் உள்ள ஒரு வாடகை அறையில் தங்கி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கோபமடைந்த ரிஷப் குமார் சோட்டி குமாரியைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை ஒரு டிராலி பைக்குள் திணித்து வைத்துவிட்டு, அறையைப் பூட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார். அந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதைக் கண்டு வீட்டு உரிமையாளர் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். போலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பையைத் திறந்து பார்த்தபோது சோட்டி குமாரியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள காதலனைப் போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in