எனக்கு வரப்போகும் பெண் : “இந்த ஒரு வரதட்சணை மட்டும் கொண்டு வந்தால் போதும்”… ‘புரட்சி திருமணம் செய்த நெல்லை சப்-கலெக்டர்’….! - cinefeeds
Connect with us

TRENDING

எனக்கு வரப்போகும் பெண் : “இந்த ஒரு வரதட்சணை மட்டும் கொண்டு வந்தால் போதும்”… ‘புரட்சி திருமணம் செய்த நெல்லை சப்-கலெக்டர்’….!

Published

on

தற்போது திருநெல்வேலி சப் கலெக்டராக பணியாற்றி வருபவர் சிவகுரு பிரபாகரன் இவர் சொந்த கிராமம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாய் ,தகப்பனார் தென்னம் கீற்று பின்னும் தொழில் செய்து வந்தனர். சிவகுருவுக்கு சின்ன வயதிலே இருந்து கலெக்டராக வேண்டும் என ஆசை இருந்துள்ளது. மேலும் பெற்றோருக்கு உதவியாக கீற்று பின்னிக் கொண்டே படித்துள்ளார். தற்போது இவர் திருநெல்வேலியில் சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சிவகுருவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க வரன் தேடியுள்ளனர். அப்போது கலெக்டரானா சிவகுரு தன் நீண்ட நாள் ஆசையான மருத்துவர் பெண்ணை தான் நான் திருமணம் செய்யவேண்டும் என்று கூறினார் அதற்க்கு பெற்றோர்கள் எதற்ககப்பா என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ‘எனக்கு ஒரு டாக்டர்தான் மனைவியாக வரவேண்டும். அவர் நம் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும். இதுதான் பெண்ணிடம் நான் கேட்கும் வரதட்சணை’ என சொல்லி பெற்றோரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.

Advertisement

பின்னர் சிவகுரு நினைத்தபடியே சென்னை நந்தனம் கல்லூரி கணிதப் பேராசிரியர் ஒருவர் அவரது மகளான டாக்டர் கிருஷ்ணபாரதியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். சிவகுருவின் விருப்பத்திற்கு கிருஷ்ணபாரதியும் சம்மதம் தெரிவிக்கவே சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் சிவகுரு பிரபாகரனின் சொந்த ஊரில் வைத்து விவசாயிகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

பின்னர் கூறிய சிவகுரு பிரபாகரன், ‘விவசாயிகள் விளையும் நிலத்தைப் பற்றி கவலைப்பட்டாலும் படுவார்களே தவிர, தங்களது உடம்பைப் பற்றி என்னைக்குமே நினைக்க மாட்டார்கள். இதனால் அவர்களது உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது கூடத் தெரியாது. ஒரு விவசாயி நன்றாக வாழ்ந்தால் இந்த நாடே நன்றாக இருக்கும் என நினைக்கிறவன் நான். அதனால்தான் எனக்கு வரப்போகும் மனைவி மருத்துவராக இருக்க வேண்டும் மேலும் அடிக்கடி இங்கு தங்கி மருத்துவ சேவை செய்ய வேண்டும் என நினைத்தேன். என்னுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்ட என் மனைவி, எல்லோரையும் நன்றாக பார்த்துப்போம் என என் கைகளை பற்றிக்கொண்டார். இதைவிட என் வாழ்நாளில் மகிழ்ச்சி இருக்க முடியாது’ என புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in