பகீர்..! பாம்பு கடித்து மனைவி பலி… அடுத்த நிமிடமே கணவன் எடுத்த விபரீத முடிவு… பரிதவிக்கும் பிஞ்சு குழந்தை.. உறைந்து போகவைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்..! பாம்பு கடித்து மனைவி பலி… அடுத்த நிமிடமே கணவன் எடுத்த விபரீத முடிவு… பரிதவிக்கும் பிஞ்சு குழந்தை.. உறைந்து போகவைக்கும் சம்பவம்..!!

Published

on

ராஜஸ்தானின் பழங்குடியினர் வசிக்கும் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஷக்கர்வாடா கிராமத்தில், விஷப்பாம்பு கடித்து மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில் கணவரும் நஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூலை 29 அன்று 22 வயதான சுனிதா என்ற பெண் விஷப்பாம்பு கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது குஜராத்தின் சூரத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த அவரது கணவர் சுனிலிடம் இந்தச் சோகச் செய்தி உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.

சொந்த ஊருக்குத் திரும்பிய சுனில், தன் மனைவியின் உடலையும் தாயை இழந்து தவிக்கும் தனது ஆறு மாதக் குழந்தையையும் கண்டு நிலைகுலைந்து போனார். மனைவியின் இறுதிச்சடங்கு முடிந்த நிலையில், கடும் மன உளைச்சலுக்கும் ஆழ்ந்த அதிர்ச்சிக்கும் ஆளான சுனில், வீட்டில் இருந்த விஷ மாத்திரைகளை விழுங்கித் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஜூலை 31 மாலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, குடும்பத்தினர் அவரைப் பன்ஸ்வாராவில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisement

தற்போது சுனில் உயிருக்குப் போராடி வரும் நிலையில், மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தாய் உயிரிழந்த நிலையில், தந்தையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால், அந்த ஆறு மாதப் பச்சை இளம் குழந்தையின் எதிர்காலம் என்னவாகுமோ என்று கிராம மக்கள் மிகுந்த கவலையுடன் சுனில் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in